புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி... மர்ம செல்போன் - அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : புழல் மத்திய சிறையின் கண்காணிப்பு கோபுரம் பகுதியில் பாகிஸ்தான் கொடி மற்றும் செல்போன் கிடந்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

திருவள்ளூரை அடுத்த சென்னை புழல் மத்திய சிறை, மொத்தம், 220 ஏக்கர் பரப்பளவில் விசாரணை, தண்டனை, மகளிர், சிறுவர் சிறை, தீவிரவாதிகளை அடைக்க உயர் பாதுகாப்பு, 'செல்' மற்றும் மருத்துவமனை, நுாலகம், உணவகம் ஆகியவற்றுடன் தமிழகத்தின் மிகப்பெரிய சிறையாக, மூன்றடுக்கு பாதுகாப்புடன் அமைந்துள்ளது.

Pakistan flag seized at Puzhal prison shakens the security issue

ஆனாலும், சிறைக்குள் செல்போன், சிம் கார்டு, கஞ்சா, கைதிகள் விரும்பும் உணவுகள், மருத்துவ வசதி உள்ளிட்ட சலுகைகள், அதிகாரிகளின் ஆசியைப் பெற்ற கைதிகளுக்கு தாராளமாகக் கிடைத்து வருவதாக அவ்வபோது குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன.

இன்று இந்த அதிர்ச்சிகளுக்கு அஸ்திவாரமிடுவது போல புழல் மத்திய சிறைச்சாசையில் பாகிஸ்தான் நாட்டுக் கொடியை கைப்பற்றியுள்ளனர். கூடவே செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கொடி மற்றும் சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Is Pakistan flag seized inside the campus of Puzhal prison reflects the security collapse inside prison
Please Wait while comments are loading...