ஆவடியில் மாபா பாண்டியராஜனுக்கு வெற்றி வாய்ப்பு - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாபா பாண்டியராஜன் வெல்லும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளராக தேமுதிகவில் இருந்து வந்த மாபா பாண்டியராஜன் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாண்டியராஜன்.

பிறகு பதவி முடியும் தருவாயில் பாண்டியராஜன் உள்பட 10 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பின்னர் பாண்டியராஜன் உள்பட 10 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அனைவரும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் பாண்டியராஜனுக்கு மட்டுமே அதிமுக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது.
ஆவடி தொகுதியில் உழைத்த கட்சி நிர்வாகிகளில் ஒருவருக்கு சீட் வழங்காததால் அதிமுகவினர் அதிருப்தியில் இருந்தபோதிலும் பாண்டியராஜன் வெல்லும் நிலை உள்ளதாக நியூஸ் 7 கருத்துக்கணிப்பு தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
இக்கருத்துக் கணிப்பின்படி அதிமுகவுக்கு இங்கு 46.5 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. திமுகவுக்கு 28.2 சதவீத ஆதரவு காணப்படுகிறது. தேமுதிக - ம.ந.கூட்டணி 12.3 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. பாமகவுக்கு 4.6 சதவீத ஆதரவுடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக 2.7 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications