சிறுமியிடம் வேலை காட்டிய கணக்கு டீச்சர் சதீஷ்.. செருப்பால் வெளுத்த பெற்றோர்
3ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு அடிஉதை விழுந்தது.
சேலம்: காமம் கண்ணை மறைத்து கொண்டவர்களுக்கு சிறுமி என்ன, கிழவி என்ன? அப்படித்தான் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வித்யா மந்திர் என்ற உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அதனால் மாணவியின் அம்மா, பிள்ளைகள் எப்போதுமே ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று சொல்வார்கள் என்று நினைத்து வலுக்கட்டாயமாக ஸ்கூலுக்கு கிளப்பினார். ஆனால் சிறுமியின் பிடிவாதம் பலமாக இருக்கவே, சந்தேகம் அடைந்த அம்மா, "குழந்தையை ஏன் போக மாட்டேங்கிறே?" என்று விசாரிக்க ஆரம்பித்தார்.

அதிர்ச்சியில் பெற்றோர்
உடனே சிறுமி தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டார், கணக்கு டீச்சர் சதீஷ், பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, அவர் தம்மிடம் நடந்து கொள்ளும் விதத்தையும் சிறுமி விவரித்தாள். இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறுமியிடம் "நாங்கள் பார்த்துக்கறோம், நீ இப்போ ஸ்கூலுக்கு கிளம்பு" என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தனர்.

செருப்பால் வெளுத்தனர்
பின்னர் நேற்று மதியம், உறவினர்களை திரட்டிக் கொண்டு பள்ளி முன் வந்து நின்றனர் பெற்றோர். பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த கணக்கு டீச்சர் சதீஷை பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே இழுத்து வந்து போட்டனர். பின்னர் சரமாரியாக அடித்து உதைத்தனர். சிறுமியின் அம்மாவுக்கு ஆத்திரம் ஏறிக் கொண்டே போனது. ஒருகட்டத்தில் செருப்பை கழட்டி வெளுக்க தொடங்கினர்.

சுருண்டு விழுந்த சதீஷ்
இப்படி ஒட்டுமொத்தமாக நம்மை கும்மி எடுப்பார்கள் என்று சதீஷ் கொஞ்சமும் நினைக்கவில்லை. பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தார். தகவல் அறிந்து பள்ளப்பட்டி போலீசார் அங்கு வந்தனர். பின்னர் விவரம் கேட்டறிந்து கணக்கு டீச்சர் சதீஷை அங்கிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேடுகெட்ட வாழ்க்கை
3-ம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் இவ்வளவு தரம்தாழ்ந்து நடக்கும் இந்த கணக்கு டீச்சர் இதற்கு முந்தைய காலங்களில் எவ்வளவு கேடு கெட்ட வாழ்க்கையை நடத்தியிருப்பாரோ, எத்தனை பெண்களிடம் இப்படிப்பட்ட வன்மத்தை காட்டி கேவலமாக நடந்து கொண்டிருப்பாரோ தெரியவில்லை. ஆசிரியர்களே ஆனாலும், காமம் தலைக்கேறி இப்படி படிக்கும் குழந்தைகளை தன் இச்சைக்கு பலியாக்க துடிப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications