For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமல்ஹாசனின் கட்சி ரெடி... தேர்தல் ஆணையத்தில் 12-இல் பிரமாண பத்திரம் தாக்கல்

கமல்ஹாசனின் கட்சி தயாராகிவிட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தில் வரும் 12-ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மன்ற நிர்வாகிகள் டெல்லி செல்கின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கவுள்ள அரசியல் கட்சி தயாரிக்கவிட்டதால் வரும் 12-ஆம் தேதி மன்ற நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்துக்கு சென்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அவருக்கு உரிய பதிலளிக்காமல் அமைச்சர்களோ கமல் அரசியலுக்கு வரட்டும், அப்போதுதான் அது எத்தகைய முள்படுக்கை என்பதை அவர் புரிந்து கொள்வார் என்று விமர்சனம் செய்தனர்.

Party name gets ready for Kamala hassan

இதையடுத்து கமல் ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதற்கான பணிகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் ரஜினியின் ஏற்கெனவே அரசியலுக்கு வருவது போல் ரசிகர்கள் மத்தியில் பேசியதால் இன்னும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரஜினி விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைத்தும் ரெடியாக உள்ளது, இனி அம்பு விடுவதுதான் பாக்கி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கமல் வரும் 21-ஆம் தேதி அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். படப்பிடிப்பு காரணங்களுக்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள கமல் அலுவலகத்தில் ரசிகர் மன்றத்தினர் கூடினர். அப்போது மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 6 பேர் என்ற முறையில் நிர்வாகிகளிடம் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர்.

இதை கமல் இறுதி செய்ததை அடுத்து மன்ற நிர்வாகிகள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வரும் 12-ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தது கட்சி அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி, அதை கமல் 21-ஆம் தேதி அறிவிப்பார்.

English summary
Kamal hassan's party name gets ready. Though he is in America, his fans club activists go to Delhi on Feb 12 to file affidavit in Election Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X