வேகம், விவேகம், தெளிவு, உண்மை, பக்குவம் நிறைந்த பேச்சு... சபாஷ் ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினியின் அரசியல் வருகை ... முழு பேச்சும் இதோ

  சென்னை: ரஜினியின் இன்றைய பேச்சில் வேகம், விவேகம், தெளிவு, உண்மை எல்லாமே இருந்தன.

  வெற்றி பெறும் வரை எந்த அரசியல்வாதியையும் திட்ட வேண்டாம், ஒவ்வொரு பிரச்சினைக்கும் அறிக்கை விட வேண்டாம் என்று சொன்னதில் பக்குவம் இருந்தது.

  Pattukottai Prabhakaran says that speed, clarity, truth in Rajini's speech

  மாற்றத்தை ஏற்படுத்த ஜனநாயக ரீதியா எந்த முயற்சியுமே எடுக்கலைன்னா.. சாகறவரைக்கும் என் மனசாட்சி குத்தும் என்றதில் எதார்த்தம் இருந்தது.

  இவரால் முடியுமா, இவரிடம் இன்றைய அரசியலுக்கான ராஜதந்திரம் இருக்கிறதா,
  அத்தனை பணம் செலவழிக்க முடியுமா, யாருடன் கூட்டணி, கொள்கைகள் என்ன,
  இதுவரை சமூகத்தின் பல பிரச்சினைகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை,
  ஜனநாயகம் மோசமானது என்று இப்போதுதான் தெரிந்ததா, ஜெயலலிதா இருந்தபோது மட்டும் தமிழகம் சிறப்பாக இருந்ததா..
  என்கிற டெம்ப்ளேட் எதிர்மறைக் கேள்விகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு..

  Pattukottai Prabhakaran says that speed, clarity, truth in Rajini's speech

  பரிட்சை எழுதுவதற்கு முன்பாகவே மதிப்பெண் போடும் முந்திரிக்கொட்டை வேலையைச் செய்யாமல்..

  ஆதரிப்பதா எதிர்ப்பதா என்கிற முன்முடிவுகள் எதையும் இப்போதே எடுக்காமல்..

  முதலில் வாழ்த்தி வரவேற்போம்..
  நான் வரவேற்கிறேன்.

  - பட்டுக்கோட்டை பிரபாகர், எழுத்தாளர்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Writer Pattukottai Prabhakaran says that Rajini's speech has speed, wisdom and truth.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற