For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'செல்வ மகள்' பெயரை சொல்லி ஏமாற்றிய மத்திய அரசு! பெண் குழந்தைகளை பெற்றவர்கள் கதி?

செல்வமகள் சேமிப்பு திட்டதின் கீழ் மத்திய அரசு அறிவித்தபடி வட்டி கொடுக்காததால் அந்த திட்டத்தில் சேர மக்களின் ஆர்வம் குறைந்து வருகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    செல்வ மகள் பெயரை சொல்லி ஏமாற்றிய மத்திய அரசு!-வீடியோ

    சென்னை : செல்வமகள் திட்டத்தின் கீழ் சேமிக்கும் தொகைக்கு அதிக வட்டி கிடைக்கும் என்று மத்திய அரசு விளம்பரம் செய்த நிலையில், வட்டி குறைவாகவே கிடைப்பதால் அந்த திட்டத்தில் சேர மக்களின் ஆர்வம் குறைந்து வருகிறது.

    பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கா பிரதமர் நரேந்தி மோடி அரசு பொறுப்பேற்றவடன் 2015ம் ஆண்டில் சுகன்யா சம்ரிதி திட்டம் அதாவது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம்.

    ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம்.

     பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்

    பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்

    இந்தக் கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகையை 21ஆம் ஆண்டு இறுதியிலோ அல்லது பெண்ணிற்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

     மந்த நிலை பிரதிபலிப்பு

    மந்த நிலை பிரதிபலிப்பு

    பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. மேலும் செலுத்தும் தொகைக்கு வட்டியாக தொடக்க காலத்தில் 9.1 சதவீத வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொருளாதார மந்த நிலை இந்த திட்டத்திலும் எதிரொலித்துள்ளது.

     மக்கள் அதிர்ச்சி

    மக்கள் அதிர்ச்சி

    வட்டி விகிதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 8.4 சதவீத வட்டி மட்டுமே அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, ஓராண்டு முடிவில் சேமிப்பு கட்டணம் ரூ. 65 ஆயிரத்திற்கு ரூ. 800 மட்டுமே வட்டியாக கிடைத்துள்ளது.

     அதிகாரிகள் தகவல்

    அதிகாரிகள் தகவல்

    பெண்களின் முன்னேற்றத்திற்காக அதிக வட்டி கொடுக்கும் சேமிப்பு திட்டம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விட்டு, இப்போது சத்தமில்லாமல் மத்திய அரசு வட்டியை குறைத்துள்ளது. இது சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிதாக கணக்கு தொடங்க நினைப்பவர்களும் அச்சமடைந்துள்ளதால் இதற்கான ஆர்வம் குறைந்து வருவதாக தபால் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

     தீர்க்குமா அரசு

    தீர்க்குமா அரசு

    மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பான திட்டம் என்று மக்கள் எண்ணிய நிலையில், தற்போது வட்டியை அரசு குறைத்திருக்கிறது. அரசின் எல்லா அறிவிப்புகளுமே இது போன்றதாகத் தான் இருக்குமோ என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அரசுத் துறைகளிலும் முதலீடு செய்வது கூட பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது போன்ற அபாயகரமானது தானோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

    English summary
    Central government's Sukanya Samrithi new account openers are in a wait and wath turn to start an account because the interest rates came down to 8.4 as announced of 9.1.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X