For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை காணும் பொங்கல் - பாபநாசம் அணைக்கு செல்ல கடும் கட்டுப்பாடு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் காணும் பொங்கலை முன்னிட்டு பாபநாசம் அணைக்கு செல்பவர்களுக்கு போலீஸ் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, பாபநாசம் அருவி, பாணதீர்த்த அருவி தலையணை, பாநாசம் சிவன் கோவில், சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு காணும் பொங்கலன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அன்றைய தினம் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தென்படும். அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் வனத்துறையினர் மற்றும் போலீசார் கட்டுபாடுகளை விதிப்பது வழக்கம். இதுபோல் இந்தாண்டும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

People restricted to visit Pabanasam dam today…

இதுகுறித்து விகேபுரம் இன்ஸ்பெக்டர் மாடசாமி கூறியிருப்பதாவது, "காணும் பொங்கலன்று (இன்று) பாபநாசம் மலைப்பகுதிக்கு வருபவர்கள் மது பாட்டில்களை எடுத்து வரகூடாது.

அணையில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு செல்ல கூடாது. தங்கள் கொண்டு வரும் உடைமைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டு்ம். முகம் தெரியாத அனனியர்கள் யாராவது சா்ப்பிட திண்பண்டங்கள் கொடுத்தால் வாங்கி சாப்பிட வேண்டாம்.

மலைக்கு திறந்தவெளி வாகனத்தில் செல்ல கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். காணும் பொங்கலை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

English summary
Kanum pongal celebrated all over Tamil Nadu today. Due to this festival people banned to bath in Pabanasam dam in Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X