For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 31% அதிகம் - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜூன் 1 ம் தேதி முதல் செப்டம்பர் 25 வரையிலான காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழையை 39 செ.மீ பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார். இது 31% சதவிகிதம் அதிகமாகும்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

Performance of Southwest Monsoon 2017 between June 1 and sep 25

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

மேலடுக்கு சுழற்சி

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இதற்கு மத்திய மேற்குவங்க கடல் பகுதியில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்க சுழற்சியே காரணம். தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும்.

31 சதவிகிதம் கூடுதல் மழை

ஜூன் 1 ம் தேதி முதல் செப்டம்பர் 25 வரையிலான காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழை 39 செ.மீ பெய்துள்ளதாக கூறினார். இது இயல்பை விட 31 சதவீதம் அதிகம் என தெரிவித்துள்ளார்.

English summary
The month of June was a good one for the four-month long Southwest Monsoon season as rain activity was in abundance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X