ஒரே ஸ்டேட்டஸ்.. உலக அளவில் டிரெண்டான பெரியார்.. மாஸ் காட்டிய நெட்டிசன்ஸ்!
பெரியார் சிலை (#PeriyarStatue) என்ற ஹேஷ்டேக் உலக அளவில் வைரல் ஆகி இருக்கிறது.
Recommended Video

சென்னை: பெரியார் சிலை (#PeriyarStatue) என்ற ஹேஷ்டேக் உலக அளவில் வைரல் ஆகி இருக்கிறது. இன்னும் பலர் இந்த டேக்கில் டிவிட் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார்.

பதிவை நீக்கினார்
அவர் பதிவிட்ட கருத்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.இதனால் எச்.ராஜா தன் பதிவை நீக்கினார்.

பெரிதானது
நேற்றைய கண்டனங்களுடன் இந்த பிரச்சனை முடிந்த இருக்கும். ஆனால் இன்று மீண்டும் பிரச்சனை உருவானது. இந்த போஸ்ட்டை நான் போடவில்லைம் என் அட்மின்தான் போட்டது என்று ராஜா பதில் அளித்து இருந்தார். மேலும்நேற்று இரவு திருப்பத்தூரில் பெரிய சிலை சேதப்படுத்தப்பட்டது.

வைரல்
இதன் காரணமாக பெரியார் சிலை (#PeriyarStatue) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் வைரல் ஆகி இருக்கிறது. தமிழகர்கள் மட்டும் இல்லாமல் மலையாளிகள், கன்னடர்கள், வட இந்தியர்கள் கூட இதில் டிவிட் செய்து இருக்கிறார்கள். நேற்று இரவில் இருந்து இது முதல் இடத்தில் இருக்கிறது.

உலக டிரெண்ட்
அதே சமயத்தில் இன்று காலை இது உலக டிரெண்டிலும் சில மணி நேரம் இடம் பிடித்து இருக்கிறது. அந்த அளவிற்கு இதில் நிறைய டிவிட்டுகள் போடப்பட்டு இருக்கிறது. குஷ்பு போன்ற பிரபலங்கள் இந்த ஹேஷ்டேக்கில் போட்ட டிவிட்டுகள் எல்லாம் வைரல் ஆகி இருக்கிறது.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications