அயோத்தி ராமருக்காக விரதம்.. குருவாயூர் கிருஷ்ணன், திருப்பாறையாறு ஸ்ரீராமர் கோவிலில் மோடி தரிசனம்
திருச்சூர்: கேரளாவிற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவிலிலும் திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலிலும் சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார் பிரதமர் மோடி.
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 நாள் விரதம் இருப்பதாகக் கடந்த 12ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய தினம் மஹாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார்.

பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோயிலுக்குச் சென்ற மோடி பிரார்த்தனை செய்தார். அதற்கு முன்னர் கோயில் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியிலும் மோடி ஈடுபட்டார். நேற்று, ஆந்திர மாநிலம், லேபக்ஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
இன்று கேரள மாநிலம் சென்ற பிரதமர் மோடி, குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை 7.35 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார். அங்கு அவரை ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
ஹெலிபேடில் இருந்து, ஸ்ரீவல்சம் விருந்தினர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடி, பிரார்த்தனை செய்ய கோவிலுக்குச் செல்வதற்கு முன், கேரள பாரம்பரிய உடையை மாற்றினார். பின்னர் கோவிலுக்கு சென்ற அவரை கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.
அதன் பிறகு காலை 8.45 மணியளவில் குருவாயூர் கோவிலில் நடந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யும் நடிகருமான சுரேஷ்கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார்.
திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குருவாயூர் கோவிலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு கடற்படைக்கு சொந்தமான சர்வதேச கப்பல் பழுது நீக்கும் மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் மராமத்து உலர் பணியகத்தை தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு எர்ணாகுளம் அருகே மரைன் டிரைவ் பகுதியில் பாரதிய ஜனதா சார்பில் நடக்கும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் பின்னர் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மற்றும் திருப்பாறையாறு ஸ்ரீராமசுவாமி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications