யுனெஸ்கோ பட்டியலில் சென்னை! இந்திய கலாசாரத்தில் சென்னை பங்களிப்பு விலை மதிப்பில்லாதது: மோடி புகழாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் நெட்வொர்க் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளதற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசைத்துறையில் சென்னை சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், அதை பாராட்டி, யுனெஸ்கோ அமைப்பு, சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது.

 PM Narendra Modi Congrats Chennai people as Unesco recognise the city

இந்தியாவிலிருந்து ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசி (காசி), ஆகிய நகரங்களும் படைப்பாக்க நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையின் பாரம்பரிய இசை கலாசாரம் காரணமாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. நமது வளமைமிக்க கலாசாரத்தில் சென்னையின் பங்களிப்பு விலை மதிப்பு இல்லாதது. இந்தியாவுக்கு இது பெருமைமிகு தருணம். இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் டிவிட்டர் வாயிலாக தனது வாழ்த்துக்களை கூறிக்கொண்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congratulations to the people of Chennai on the city’s inclusion in the UNESCO Creative Cities Network for its rich musical tradition. Chennai’s contribution to our rich culture is precious. This is a proud moment for India, says PM Narendra Modi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற