வன்னியர் இட ஒதுக்கீடு... தம்பிங்க சும்மா இருக்க மாட்டாங்க! யாரை எச்சரிக்கிறார் அன்புமணி ராமதாஸ்?
கள்ளக்குறிச்சி : வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லை என்றால் தம்பிகள் சும்மா இருக்கமாட்டார்கள் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வர நிர்வாகிகள் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார்..

பாமக ஆட்சி
தொடர்ந்து பேசிய அன்புமணி," இந்தியா ஒற்றுமையான நாடு என்றும் இந்தியாவில் இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றும் தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கை தமிழ் மொழி இணை மொழியாக ஆங்கிலம் உள்ளது இதுவே போதுமானது . 55 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இரண்டு கட்சிகளையும் போதும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். கன்னியாகுமரி, தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்ட மக்களும் பாமகவை விரும்புகின்றனர்.

நிழல் நிதி அறிக்கை
ஏனெனில் தகுதி, செயல் திட்டம் என அனைத்தும் பாமகவிடம் உள்ளது. இந்தியாவிலேயே கடந்த 20 ஆண்டுகளாக நிழல்நிதி அறிக்கை வெளியிடும் கட்சி பாமக தான். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் கோட்டையில் கொடியேற்றி, நிஜ நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஐந்தாண்டு காலம் ஆட்சி கிடைத்தால் சொடக்கு போட்டு, தமிழகத்தை முன்னேற்றி விடலாம்.

புதிய வியூகங்கள் உள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி பாமக 2.0 அரசியல் செய்ய போகிறது. புதிய யுக்திகள், புதிய வியூகங்கள், புதிய அரசியல், புதிய நிர்வாகிகள். அதனால் தான் மறுசீரமைப்பு நடைபெறுகிறது. ராமதாஸ் பெற்று தந்த 10.5 சதவீத ஒதுக்கீட்டை உச்ச மற்றும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

ஒதுக்கீடு ஜாதி பிரச்னையல்ல
தமிழக அரசு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது ஜாதி பிரச்னையல்ல, சமூக நீதி. தமிழகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாயம் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாவிட்டால் தம்பிகள் சும்மா இருக்க மாட்டார்கள்












Click it and Unblock the Notifications