எலி மருந்து விஷம் தடவிய கேக் சாப்பிட்ட 8 வயது சிறுவன் பரிதாப மரணம்.. கயத்தாறு அருகே சோகம்
எலிமருந்து தடவிய கேக் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தான்.
Recommended Video

கயத்தாறு: எலியை பிடிக்க எலிமருந்து விஷம் தடவி வைக்கப்பட்ட கேக்கை எடுத்து சாப்பிட்ட 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கயத்தாறு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கயத்தாறு அருகே உள்ள கிராமம் தலையால் நடந்தான்குளம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெயர் தெய்வம். இவர் வீட்டில் பல நாட்களாக எலி தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் எலிகளை ஒழிக்க, கடந்த 2 இரு தினங்களுக்கு முன்பு எலிமருந்து விஷம் தடவிய கேக்கை வாங்கி வந்தார். அதனை எலிகள் வந்து செல்லக்கூடிய மறைவான பகுதிகளில் வைத்தார். இந்த கேக்கை சாப்பிட்டு எலிகளும் பல இறந்தன.

அதனால் மீண்டும் இதேபோல் விஷம் தடவிய கேக்கை வைத்தால், இருக்கும் மீதமுள்ள எலிகளும் இறந்துவிடும் என்று நினைத்து, அதேபோல, கேக்கை நேற்று முன்தினம் வாங்கி வந்தார். ஆனால் எல்லா எலிகளும் அன்றே இறந்துவிட்டதால், வேறு எலிகள் எதுவும் சிக்கவில்லை. அதனால் அந்த கேக்கை எடுத்து போடாமல் வைத்த இடத்திலேயே அப்படியே மறந்து விட்டுவிட்டார்.
இந்த நிலையில் அவரது 8 வயதான மூத்த மகன் முத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது, எலிக்கு வைக்கப்பட்ட கேக் இருப்பதை பார்த்ததும் ஆசையாக எடுத்து சாப்பிட்டுவிட்டான். ஆனால் வாயில் நுரை தள்ளி கீழே சிறுவன் சுருண்டு விழுந்தான். இதனை கண்டு பதறியடித்த குடும்பத்தார் முத்துவை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்து உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications