For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு.. 22 வயது இளைஞர் பலி.. 5 பேர் படுகாயம்

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் போலீசார் இன்று மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்-வீடியோ

    தூத்துக்குடி: அண்ணாநகர் பகுதியில் போலீசார் இன்று மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

    தூத்துக்குடியில் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் 17 வயது மாணவி உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி அண்ணாநகர் 7வது தெருவில் இன்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    துப்பாக்கிச்சூடு

    துப்பாக்கிச்சூடு

    அப்போது பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 வயதான காளியப்பன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

    செல்வதில் சிக்கல்

    செல்வதில் சிக்கல்

    இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். 144 தடையால் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    12ஆக உயர்வு

    12ஆக உயர்வு

    நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் இன்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    போலீஸ் எச்சரிக்கை

    போலீஸ் எச்சரிக்கை

    இதனால் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் இரண்டாவது நாளாக உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Police again fired in Thoothukudi 22 years old killed. Five people injured heavily.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X