For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடேங்கப்பா.. பெரம்பலூர் மாவட்ட காவல்துறையே வாழ்த்துதாம்- நெஞ்சுக்கு நீதிக்கு பேனர் வைத்த போலீஸ்காரர்

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும்'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்திற்கு போலீஸ்காரர் ஒருவர் பேனர் வைத்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவரும் முதல் திரைப்படம் என்பதால் 'நெஞ்சுக்கு நீதி' பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூரைச் சேர்ந்த கதிரவன் என்ற போலீஸ்காரர் "உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்" என பேனர் வைத்துள்ளார்.

இளந்தலைவர் உதயநிதி...விரைவில் அமைச்சாராவார்...மெய்யநாதன் கருத்து மெய்யாகுமா? இளந்தலைவர் உதயநிதி...விரைவில் அமைச்சாராவார்...மெய்யநாதன் கருத்து மெய்யாகுமா?

நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம். பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஆர்ட்டிகள் 15' திரைப்படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிசந்திரன், ஷிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

 திமுகவினர் உற்சாகம்

திமுகவினர் உற்சாகம்

'நெஞ்சுக்கு நீதி'படத்துக்கு திமுகவினர் பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகின்றனர். தியேட்டர்களுக்கு முன்பு திமுக நிர்வாகிகள் கட் அவுட், பேனர்களை போட்டி போட்டு வைத்துள்ளனர். பல இடங்களிலும், படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு திமுகவினர் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, அதுவும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆன பிறகு வரும் முதல் திரைப்படம் என்பதால் இப்படம் திமுகவினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இலவச டிக்கெட்

இலவச டிக்கெட்

பல இடங்களில் தி.மு.க நிர்வாகிகள் சார்பாக தியேட்டரில் டிக்கெட்டுகள் வாங்கப்பட்டு இலவசமாக கட்சித் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் இன்று மானாமதுரை தியேட்டரில் மாலை காட்சிக்கான மொத்த டிக்கெட்டையும் வாங்கி தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கியுள்ளாராம். மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகரான பாலா, மதுரை சோலமலை தியேட்டரில் நெஞ்சுக்கு நீதி படம் பார்க்க தனது சார்பில் இலவச டிக்கெட் வழங்கி வருகிறார். பல இடங்களில் தி.மு.க நிர்வாகிகள் சார்பாக தியேட்டரில் டிக்கெட்டுகள் வாங்கப்பட்டு இலவசமாக கட்சித் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் இன்று மானாமதுரை தியேட்டரில் மாலை காட்சிக்கான மொத்த டிக்கெட்டையும் வாங்கி தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கியுள்ளாராம். மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகரான பாலா, மதுரை சோலமலை தியேட்டரில் நெஞ்சுக்கு நீதி படம் பார்க்க தனது சார்பில் இலவச டிக்கெட் வழங்கி வருகிறார்.

அமைச்சர்

அமைச்சர்

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கணேஷ் தியேட்டரில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் காட்சி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் எடுத்து திரையிடப்பட்ட நிலையில், அதனை தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து, படம் பார்த்து ரசித்தார். முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் கோன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. இப்படி திமுக நிர்வாகிகள் உதயநிதியைக் கவர்வதற்காக 'நெஞ்சுக்கு நீதி'யை பயங்கரமாக கொண்டாடி வருகின்றனர்.

பெரம்பலூர் போலீஸ்

பெரம்பலூர் போலீஸ்

இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் பெரம்பலூரில் ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த கதிரவன் என்பவர் "உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்" என பேனர் வைத்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் போலீஸ்காரர், உதயநிதி ஸ்டாலினுக்காக பேனர் வைத்துள்ளது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

English summary
Police set up a banner for Udhayanidhi Stalin's 'Nenjukku Needhi' movie in Perambalur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X