போலீஸ் குடும்பத்தினர் முற்றுகையிடத் திட்டம்?... தலைமை செயலகத்தில் போலீஸ் குவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போலீஸாரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளதால் தலைமை செயலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.

Police force in TN Secretariat

இந்நிலையில் போலீஸாரின் குடும்பத்தினர், ஓய்வுபெற்ற காவலர்கள் போராட்டம் நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தலைமை செயலக பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மெரீனா, சேப்பாக்கம், காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னம் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police force deployed in TN Secretariat as they got information that families of police and ex police may protest.
Please Wait while comments are loading...