அப்துல்கலாம் மணிமண்டபம் திறக்க மோடி வருகை... ராமேஸ்வரம் போலீசார் ஆலோசனை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு மணி மண்டபத்தைத் திறந்து வைக்கக பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தர இருக்கிறார். பிரதமருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அவரை நல்லடக்கம் செய்த பேய்க்கரும்பு என்னுமிடத்தில் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசு 15 கோடி ரூபாய் செலவில் கட்டி முடித்துள்ளது.

Police had a discussion meet regarding security for prime minister Modi

பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தை வரும் ஜூலை 27ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க உள்ளார். மோடியின் வருகையை ஒட்டி அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி பிரதீப் குமார் மற்றும் எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு ஆலோசனை செய்தனர்.

DIG,SP Officers Reviewing the Security in Abdul Kalam Memorial-oneindia Tamil

ஜெயலலிதா மறைவுக்கு வந்த மோடி, தற்போதுதான் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime minister Narendra modi will come on July 27 to Ramehswaram for the opening ceremony function of Late Abdul kalam's memorial at Rameshwaram.
Please Wait while comments are loading...