For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி எஸ்.பி டார்ச்சர் செய்வதாக வழக்கு தொடர்ந்த இன்ஸ்பெக்டர் வேறு வழக்கில் சஸ்பெண்ட்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மீது வழக்கு தொடர்ந்த இன்ஸ்பெக்டர் செல்வம், வேறு ஒரு வழக்கில் டிஐஜியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் செல்வம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது, தட்டபாறை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

அப்போது அந்த பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில், கொலைக்கு சம்பந்தமில்லாத 4பேரை கைது செய்து சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 4பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

Police inspector suspended

இந்நிலையில், போலீசார் விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளை கைது செய்தனர். கொலைக்கு சம்பந்தமில்லாமல் கைது செய்யப்பட்ட 4பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக நெல்லை சரக டிஐஜி முருகன் உத்தரவிட்டார்.

சஸ்பெண்ட் செய்ய்பபட் செல்வம், ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் தனக்கு டார்ச்சர் கொடுப்பதாக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Police inspector who filed case against district police SP is now under suspension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X