மாணவர் மர்ம மரணம்… சிறை கண்காணிப்பாளர் மகனுக்கு நடந்தது என்ன.. வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: சிறை கண்காணிப்பாளர் மகன் படுகாயம் அடைந்து திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரை தாக்கியது யார்? எதற்காக தாக்கப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை சிறை கண்காணிப்பாளர் மகனுக்கு திங்கள் கிழமை அன்று 11ம் வகுப்பு பள்ளி தொடங்க உள்ளது. இதனால் பள்ளிக் கூடம் சென்று புத்தகங்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவர் வீட்டிற்கு வந்த போது, மண்டை மற்றும் முகத்தில் ரத்தக் காயங்களோடு காணப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இதனைக் கண்ட பெற்றோர் கதறியுள்ளனர். பின்னர், அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு படுகாயம் அடைந்தவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

நாடித் துடிப்பு குறைந்து பதற்றம்

நாடித் துடிப்பு குறைந்து பதற்றம்

அப்போதே அவருக்கு நாடித் துடிப்பு குறைவாக இருந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிடும்படி கூறியுள்ளனர்.

திடீர் மரணம்

திடீர் மரணம்

இதனால் உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் எதிர் பாராத விதமாக வழியிலேயே மாணவருக்கு உயிர் பிரிந்தது. இதனால் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொலையா?

கொலையா?

சிறைக் கண்காணிப்பாளர் மகனுக்கே இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழவாங்கும் நோக்கில் மாணவர் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 11th student, who was son of prison superintendent, died in Madurai, police inquiry.
Please Wait while comments are loading...