பிக்பாஸ் பஞ்சாயத்து... முற்றுகைப் போராட்டத்தால் நடிகர் கமல்ஹாசன் வீடு முன்பாக போலீஸ் குவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியால் சர்ச்சைகள் வெடித்த நிலையில் கமல்ஹாசன் வீட்டு முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 18 நாட்களாக தொடர்ந்து சர்ச்சைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதில் உச்சகட்டமாக காய்த்ரி ரகுராம், சேரி பிஹேவிய என வக்கிரத்தைக் கொட்டினார்.

Police Protection for Actor Kamalhaasan House

இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன், காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக பேசினார்.

அத்துடன் தம்மை விமர்சித்த இந்து மக்கள் கட்சியினரையும் அவர் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் இன்று நடிகர் கமல்ஹாசன் வீட்டு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

மேலும் கமல்ஹாசனின் திரைப்படங்களை வெளியாக விடமாட்டோம் எனவும் திரை அரங்குகளை அடித்து நொறுக்குவோம் எனவும் இந்து மக்கள் கட்சியினர் மிரட்டியும் உள்ளனர். தற்போது கமல்ஹாசன் வீடு முன்பாக போலீஸ் குவிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Following the Hindu Outfit protest, now heavy police deployed near Actor Kamalhaasan house.
Please Wait while comments are loading...