பணிச்சுமை காரணமாக சென்னையில் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணிச்சுமை காரணமாக சென்னை நீலாங்கரையில் காவலர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரிபவர் காவலர் பாலமுருகன். வயது 28. இவர் இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

Policeman suicide at Chennai due to Restless Work

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் சக காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பணிச்சுமை, மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 3 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Policeman suicide at Chennai due to Restless Work. Policeman named Balamurugan from Injambakkam Police Station committed Suicide.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற