மோடியின் "பிராமிஸை" டூத்பேஸ்டுடன் ஒப்பிட்டு நக்கலடித்த பிரகாஷ்ராஜ் #justasking

Posted By:
Subscribe to Oneindia Tamil
  எங்கள் ஆட்சியில் தக்காளி வெங்காயத்திற்குத்தான் முன்னுரிமை- மோடி- வீடியோ

  சென்னை: பிரதமர் மோடியின் வாக்குறுதிகளை பிராமிஸ் டூத்பேஸ்டுடன் ஒப்பிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

  சமீபகாலமாக நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மற்றும் பாஜக அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவர்களை கடுமையாகவும் விமர்சனம் செய்து வருகிறார்.

  Prakash Raj compares promise with Promise tooth paste

  இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் பெங்களூரில் மெகா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாக்காளர்களிடம் பேசினார்.

  அப்போது அவர் கூறுகையில் 17,000 கோடி ரூபாயில் 160 கி.மீ தூரத்துக்கு புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தார். இதை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

  இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், 2014-ஆம் ஆண்டு விற்கப்பட்ட பிராமிஸ் டூத் பேஸ்ட் (தேர்தல் வாக்குறுதிகள்) என்னவாயிற்று? இந்த டூத்பேஸ்டை விற்றுவிட்டு பல் தேய்க்க மறந்துவிட்டதால் எனது நாட்டின் விவசாயிகள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளின் முகத்தில் சிரிப்பை கொண்டு வர முடியவில்லை. இந்த நிலையில் கர்நாடகா பொதுக் கூட்டத்தில் நேற்றும் பிராமிஸ் டூத்பேஸ்ட் விற்கப்பட்டுள்ளது. அதாவது நிறைவேறுமா, விவசாயிகள், இளைஞர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  பிரதமரின் வாக்குறுதிகளை பிராமிஸ் டூத்பேஸ்டுன் ஒப்பிட்டு பல் தேய்க்க மறந்துவிட்டதாக பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Prakash Raj compares Modi's election promise with Promise Toothpaste and tweets that PROMISE TOOTHPASTE sold in 2014 could not bring a smile on distressed farmers or jobless youth of my country. do you believe PROMISE TOOTHPASTE sold yesterday in Karnataka rally, will bring it.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற