அரசியலுக்கு வருகிறாரா பிரகாஷ்ராஜ்? - மத்திய அமைச்சர் ஹெக்டேவுடன் காரசார மல்லுக்கட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டுவிட்டரில் "ஜெட் ஆஸ்கிங்" என்ற ஹாஷ்டாக் மூலமாக மத்திய, மாநில அரசுகள் மீது தனக்கு இருக்கும் அருப்தியை கேள்விகளாக நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு செய்து வருகிறார். இதில் அவர் சமீபத்தில் கேட்கப்பட்ட கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்கத்தில் தமிழர்கள் தான் நிற்கவேண்டும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று கூறி வந்த நடிகர் பிரகாஷ்ராஜ், பின்னர் தமிழகத்தில் திறமையானவர்கள் யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம் என்ற கருத்தை ஊடகங்களின் மூலம் பிரகடனம் செய்து வந்தார்.

Prakash Raj joins latest in the series of Actors opposing Politician

இதன்மூலமாக அரசியல் பேச்சுகளுக்கு அறிமுகமான பிரகாஷ்ராஜ் தற்போது, மத்திய அரசையும், மாநில அமைச்சர்களையும், ஏன் பிரதமர் மோடியையும் கூட தனது நேரடி கேள்விகளால் துளைத்து வருகிறார். டுவிட்டரில் "ஜெட் ஆஸ்கிங்" என்ற ஹாஷ்டாக் மூலமாக அவர் இந்த கேள்விகளை கேட்டு வருகிறார்.

சமீபத்தில் பாஜக மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே, மதசார்பற்றவர்களின் பெற்றோர்கள் யார் என்று தெரியாது, அவர்களுக்கு என்று சொந்த அடையாளம் ஏதும் கிடையாது என்று பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், மதசார்பற்றவர்களின் பிறப்பை கேவலப்படுத்துவதா எனக் கொந்தளித்துள்ளார்.

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்துக்கொண்டு மக்களையே கேவலப்படுத்துவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் கேட்டுள்ளார். பிற மதங்களை திட்டுவது, மதசார்பற்றவர்களை கேவலமாக பேசுவது உள்ளிட்டவைகளிலிருந்து எப்போது விடுபடுவீர்கள் எனவும் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prakash Raj joins latest in the series of Actors opposing Politician. He started a hashtag in twitter and named it "justasking" and shooting his questions towards the state and central politician. To a extend he addressed PM Modi in a question too.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற