For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசங்களா ஒரு குட் நியூஸ்... சென்னை பள்ளிகளில் முன் அரையாண்டு தேர்வுகள் ரத்தாம்

மழை எதிரொலியால் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட முன் அரையாண்டு தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மழையால் பாடங்களை முடிக்க முடியாததால் உயர்நிலை வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை கடந்த 30-ஆம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை தீவிரமடைந்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 தண்ணீர் வெளியேற்றம்

தண்ணீர் வெளியேற்றம்

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் பள்ளி துவங்கும்போது வளாகத்துக்குள் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டுவிட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்று கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 மழை படிப்படியாக குறையும்

மழை படிப்படியாக குறையும்

இந்நிலையில் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தண்ணீர் வடியாத பள்ளிகள் தவிர்த்து சென்னையில் ஏனைய பள்ளிகள் திறக்கப்பட்டன.

 மாணவர்களுக்கு தேர்வு

மாணவர்களுக்கு தேர்வு

இந்நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு முன் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளது. அதற்கான அட்டவணையும் முன்கூட்டியே வழங்கப்பட்டுவிட்டது.

 தேர்வு இல்லை

தேர்வு இல்லை

மழையால் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பாடங்களை முடிக்க முடியாததாலும் சென்னை மாவட்டத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்களும், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

English summary
As heavy rain lashes in Chennai Schools gets continuous holiday, so the Chief Education Officer announces that the pre Half yearly exams for classes 10 to 12 are cancelled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X