திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் வெல்வாரா- ஜூவி சர்வே சொல்வது என்ன?
சென்னை: சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனுக்கு வெற்றி தேவதை பக்கத்தில் வந்தாலும் இழுபறி நிலையே நீடிப்பதாக ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்துடன் மக்கள் நலக்கூட்டணியை தொடங்கியவர் திருமாவளவன். ஒவ்வொரு தேர்தலிலும் திமுக, அதிமுக என்று மாறி அணியில் இந்த கம்யூனிஸ்ட்டுகள், மதிமுகவையும் கூட்டணி ஆட்சி என்று முழக்கமிட வைத்து மக்கள் நலக்கூட்டணியை நால்வர் அணியாக்கிய பெருமை திருமாவளவனுக்கே உண்டு.

இந்த கூட்டணி தேமுதிக தமாகா உடன் இணைந்து ஆறுமுக கூட்டணியாக தேர்தலை சந்திக்கிறது. தேமுதிக 104 தொகுதியியிலும் மதிமுக 29 தொகுதியிலும் தமாகா
26 தொகுதியிலும், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
காட்டுமன்னார்கோவில் தனி தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் முருகுமாறன், திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மணிமாறன், போட்டியிடுகிறார். பாமகவும், பாஜகவும் களத்தில் இருந்தாலும் அவர்களுக்கு இங்கு சரியான வாக்கு வங்கி இல்லை. விடுதலை சிறுத்தைகள் - காங்கிரஸ் கட்சி இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் திருமாவளவன் கடுமையான போட்டியையை சந்தித்து வருகிறார். திருமாவளவனுக்கு வாக்களிப்போம் என்று 30 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். அதேபோல காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்போம் என்று 31 சதவிகிதம் பேரும், அதிமுகவிற்கு வாக்களிப்போம் என்று 28 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாமகவிற்கு 5 சதவிகிதம் பேர் ஆதரவளிப்போம் என்று கூறியுள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருநாரையூர், குமாரக்குடி, ஸ்ரீமுஷ்ணன், வானமாதேவி, உள்ளிட்ட ஊர்களில் திருமாவளவனுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. எனவே கடுமையான நெருக்கடிக்கு இடையேதான் திருமாவளவனுக்கு மோதிரம் ஜொலிக்கும் என்கிறது ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications