For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் மோடி இன்று கோவை வருகை... பாதுகாப்பு பணியில் 6000 போலீசார் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

கோவை: புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி கட்டட திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 6000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளர்.

கோவை சிங்காநல்லூர் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கவும், கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் நரேந்திரமோடி இன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Prime Minister Narendra Modi will visit Coimbatore on today

இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகம், பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம் ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கூட்டம் நடைபெறும் அரங்கம் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கோவைக்கு மதியம் 2.30 மணிக்கு வந்திறங்கும் பிரதமர் மோடி, கார் மூலம் சின்னியம்பாளையத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் கார் மூலம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வருகிறார்.

பின்னர் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இதையடுத்து 5.40 மணிக்கு கோவை விமான நிலையம் புறப்படிகிறார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இதற்காக அவருக்கு டெல்லியில் இருந்து குண்டு துளைக்காத கார்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் அவர் செல்லும் வழியில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு, போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
More than 5500 police personnel would be deployed in Coimbatore as part of security measures for the visit of Prime Minister Narendra Modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X