For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரிசார்ட்டிலிருந்து சொகுசு விடுதிக்கு மாறினர் தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள்! காரணம் என்ன?

புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள், இன்று புதுச்சேரி 100 அடி சாலையிலுள்ள தனியார் சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

By Devarajan
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் தங்கியுள்ள தனியார் ரிசார்ட்டிலிருந்து, வேறு சொகுசு விடுதிக்கு இன்று மாற்றப்படுகின்றனர் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

அதிமுக, ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு பல பிரிவுகளாக உடைந்தது. அதில் பெரிய அணிகளாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்தன.

அதன் பின்னர், முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். இது அதிமுகவில் பெரிய அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள, 'தி விண்ட் பிளவர் ரிசார்ட்' என்ற, ஆடம்பர ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு அவர்களை யாரும் எளிதில் தொடர்புகொள்ளாத வகையில் தினகரன் ஆட்கள் காவல் காத்து வருகிறார்கள்.

'வாக்கிங் ஈட்டிங்' ஜாலி லைஃப்

'வாக்கிங் ஈட்டிங்' ஜாலி லைஃப்

கடந்த 4 நாட்களாக அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் வாக்கிங் செல்வது, விளையாடுவது, வகை வகையான உணவுகள் என ஜாலி லைஃபில் உள்ளனர். இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை கிளப்பிருந்தது.

பெருகிய எதிர்ப்புகள்

பெருகிய எதிர்ப்புகள்

இந்த நிலையில், புதுச்சேரி முன்னாள் எம் எல் ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் நேற்று முன்தினம், ஏராளமான அதிமுகவினர் ஒன்று திரண்டு, எம்எல் ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட் முன்பு போராட்டம் நடத்தினர். தினகரன் கொடும்பாவியையும் எரித்து முழக்கங்கள் எழுப்பினர்.

கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

மேலும், ஓம்சக்தி சேகர் மாவட்ட ஆட்சியரிடம், தினகரன் ஆதரவு எம் எல் ஏக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு அளித்தார். இதனால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது.

டைம் முடிந்தது

டைம் முடிந்தது

இந்நிலையில், ரிசார்ட்டில் முன்பதிவு செய்த நேரம், இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வேறு சொகுசு விடுதிக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன்வே சொகுசு விடுதி

சன்வே சொகுசு விடுதி

புதுச்சேரி 100 அடி சாலையிலுள்ள சன்வே தனியார் சொகுசு விடுதிக்கு இன்று தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் மாற உள்ளதாக அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள். இதனால் 100 அடி சாலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

English summary
Pro-TTV Dinakaran MLA's Changed into new Star Hotel in 100 feet road at Pudhucherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X