திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
சென்னை: இயக்குநர் விஜய்யின் தந்தையும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்.
'கலகலப்பு,' 'படிக்கிற வயசுல', 'நியாயத் தராசு', 'இனியெல்லாம் சுகமே', 'நாட்டுப்புற நாயகன்' உள்பட பல படங்களைத் தயாரித்தவர், ஏ.எல்.அழகப்பன். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவராக இருந்தார். இவருடைய மகள் திருமணத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு, கருணாநிதி நடத்தி வைத்தார். அதேபால் ஏ.எல்.அழகப்பனின் மகனும் இயக்குநருமான விஜயின் திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த அளவுக்கு திமுகவுடன் நெருக்கமானவர் அழகப்பன்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முக்கிய பதவி வகித்து வந்த ஏ.எல். அழகப்பன் நீண்ட காலம் திமுகவில் இருந்தவர். கருணாநிதிக்கு நெருக்கமானவர். இவரும் சரத்குமார் பாணியில் திமுக என்னை அவமானப்படுத்திவிட்டது என்று கூறி அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் முல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவருக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
“எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு”.. அண்ணா நகரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்! -
12 நாட்களே மிச்சம்! ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா? -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
புதுச்சேரியில் புது ரெக்கார்டு! வரலாறு படைத்த வாக்காளர்கள்.. வாக்கு சதவிகித்தை பாருங்க! -
159 வேட்புமனுக்கள் வாபஸ்.. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்! -
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications