For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னைப் புத்ககப் பிரியர்களே.. 9ம் தேதி தொடங்குகிறது புத்தக கண்காட்சி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வருடாவருடம் நடக்கும் புத்தக கண்காட்சி இந்த ஆண்டும் ஜனவரி 9 ஆம் தேதியன்று தொடங்க இருக்கின்றது.

இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், "தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் 38 ஆவது ஆண்டு புத்தக கண்காட்சி வரும் 9 ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது.

Publishers, book sellers seek permanent venue for fairs

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மங்கள்யான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். 2 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 700 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் நூல்கள் இடம் பெறுகின்றன. அனைத்து விதமான புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கண்காட்சி நடக்கும் நாட்களில் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், அறிஞர்கள், இதழாளர்கள், பிற படைப்பாளிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள், ஓவியப்போட்டிகள், சிறுகதைப்போட்டிகள், அனைத்துப் பிரிவினருக்குமான விவாத மேடை, குறும்படங்கள், கலை நிகழ்ச்சிகள், விருது வழங்குதல், புத்தக வெளியீடு, நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்- வாசகர் சந்திப்பு, உரைநடை கவிதை அரங்கம் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

வரும் 12, 13 தேதிகளிலும், 19 முதல் 21 ஆம் தேதி வரை பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதி விடுமுறை நாள்களில் அதாவது வரும் 10, 11 தேதிகளிலும், 14 முதல் 18 தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். நுழைவுக்கட்டணம் ரூபாய் 10.

12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்குக் கட்டணம் கிடையாது. பார்வையாளர்களுக்கு சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சிறந்த பதிப்பாளர்கள், விற்பனையாளர், சிறந்த குழந்தை எழுத்தாளர், சிறந்த ஆங்கில எழுத்தாளர், சிறந்த சிறுவர் அறிவியல் நூல், சிறந்த தமிழ் அறிஞர், சிறந்த நூலகர் விருதுகளும் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Book publishers and sellers on Monday urged the State government to allocate a permanent venue for book fairs in the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X