அம்மா காலில் வெற்றிக் கனியை கொண்டு வந்து சேர்ப்பேன்... புதுவை வேட்பாளர் சபதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுச்சேரியின் நெல்லித்தோப்பு இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஓம் சக்தி சேகர், தேர்தலில் வெற்றி பெற்று வெற்றிக் கனியை முதல்வர் ஜெயலலிதாவின் காலில் கொண்டு வந்து சேர்ப்பேன் என்று சபதமிட்டுள்ளார்.

நெல்லித்தோப்பு தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் ஓம் சக்தி சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அதிமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். தேர்தல் பிரசாரம் குறித்து விவாதித்தார். பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

Puducherry ADMK candidate confidant of victory

செய்தியாளர்களிடம் ஓம் சக்தி சேகர் பேசுகையில், என்னை நெல்லித்தோப்பு தொகுதி வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. என்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்று அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிப்பேன் என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puducherry ADMK candidate OM Sakthi Sekhar has expressed his confidance over his victory in the Nellithoppu by election. He came to Chennai and visited Apollo hospital and discussed with ADMK leaders.
Please Wait while comments are loading...