Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் நான் போட்டியிடுவேன்.. ஃபார்வர்டு பிளாக் பிவி கதிரவன் பரபர!

Subscribe to Oneindia Tamil

தேனி : அதிமுக கூட்டணியில் தேனியில் நான் போட்டியிடுவேன் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செலாளர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

PV kathiravan says that he will contest in theni constituency in aiadmk alliance

அதிமுக கூட்டணியில் ஃபார்வர்டு பிளாக்: அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், தேசிய துணைத் தலைவருமான பி.வி.கதிரவன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார். அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது.

தேனியில் கதிரவன் போட்டி: இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் நான் போட்டியிடுவேன் எனக் கூறியுள்ளார் பிவி கதிரவன். அதிமுக கூட்டணியில் தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், தேனி தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்பட்டால் தான் போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார் பிவி கதிரவன். மேலும், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி 'இந்தியா' கூட்டணியில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது பற்றியும் விளக்கியுள்ளார் கதிரவன்.

தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த கதிரவன் பேசுகையில், "அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம் ஜனவரியில் மதுரையில் நடந்தது. இதில் தேசிய பொது செயலாளர் தேவராஜன் தவிர மற்ற 12 பேர் பங்கேற்றனர். இதில் 2023 அக்டோபரில் அறிவிக்கப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் பெயர்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், நான் பொதுச்செயலாளர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருவர் 3 முறை அல்லது 12 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருக்கலாம் என கட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் என் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளோம்.

அங்கு இந்தியா, இங்கு அதிமுக: தற்போது அதிமுக கூட்டணியில் தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை கேட்டுள்ளோம். உசிலம்பட்டியில் எங்கள் கட்சி ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது. தேனி ஒதுக்கப்பட்டால் நான் போட்டியிடுவேன். பார்வர்டு பிளாக் தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணியில் உள்ளது. இங்கு அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். எங்கள் செயல்பாடு பாஜகவிற்கு எதிரானது தான்.

கேரள, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 'இந்தியா' கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தனித்து நிற்கின்றன. அதுபோல, இங்கு நாங்கள் அதிமுகவுடன் நிற்கிறோம். அதிமுக வன்னியருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்தது தவறு எனில் அதனை அரசாணையாக திமுக அறிவித்ததும் தவறு தான்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+