அதிமுகவில் மீண்டும் கடித யுத்தம்- நீக்கத்துக்கு விளக்கம் கேட்டு தொழிற்சங்கம் சின்னசாமி போர்க்கொடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் அண்ணா தொழிற்சங்கப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆர். சின்னசாமி கடித யுத்தத்தை தொடங்கியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் படுதோல்வி அடைந்தார். இத்தோல்விக்கு அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளே காரணம் என குற்றம்சாட்டி ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமைக்கு கடிதம் அனுப்பினார்.

கடித யுத்தம்

கடித யுத்தம்

தமது கடிதத்தின் மீது நடவடிக்கை என்ன? என்றும் கேட்டும் குடைச்சல் கொடுத்தார் மதுசூதனன். அப்போதே பல அதிருப்தியாளர்கள் மதுசூதனனைப் பின்பற்றி கடித யுத்தத்துக்கு தயாராகின்றனர் என நாம் பதிவு செய்திருந்தோம்.

போர்க்கொடி தூக்கிய சினி

போர்க்கொடி தூக்கிய சினி

இந்நிலையில் அண்மையில் அண்ணா தொழிற்சங்க பேரவை பொறுப்பில் இருந்து ஆர்.சின்னசாமி விடுவிக்கப்பட்டார். தினகரனுடன் அவர் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

நீக்க அதிகாரம் இல்லை

நீக்க அதிகாரம் இல்லை

இதையடுத்து தம்மை நீக்கியதற்கான விளக்கத்தை தர கோரி ஈபிஎஸ்-ஓபிஎஸ்-க்கு கடிதம் ஒன்றை சின்னசாமி அனுப்பியுள்ளார். அதில், பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர்கள்தான் மற்றவர்களை நீக்க முடியும். ஒருங்கிணைப்பாளர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை.

பதில் இல்லை எனில் கோர்ட்

பதில் இல்லை எனில் கோர்ட்

தம்மை நீக்கியது ஏன் என்பதற்கு விளக்கம் தர வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தை நாட நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறாராம் சின்னசாமி. சின்னசாமியின் கடிதம் அதிமுகவில் சலசலப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
R Chinnaswamy who was removed from the Post of secretary of the Anna Thozhirsanga Peravai, now Seeks explanation from AIADMK.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற