For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ள பாதிப்பை பார்வையிட்ட ராகுல் ! பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளை புரட்டிப் போட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட இந்த மழை வெள்ள சேதத்தை பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட நேற்று டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார்.

Rahul gandi visited flood area in tamilnadu and pudhucherry

சண்முகா நகர், ஈச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அரிசி, துணி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். தொடர்ந்து கடலூரில் காரைக்காடு பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும் அவர் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மாணவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து உரையாடினார்.

பின்னர் மேற்கு தாம்பரம், முடிச்சூர், வில்லிவாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்கிருந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். முடிச்சூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை தண்ணீரில் நடந்து சென்றே பார்வையிட்டார். இதையடுத்து வில்லிவாக்கத்தில் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவி குறித்தும் கேட்டறிந்தார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ராகுல், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவே நான் வந்துள்ளேன். அரசியல் ரீதியான கேள்வி ஏதும் கேட்க வேண்டாம். நிவாரணம் வழங்குவதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். இந்த சூழலில் இருக்கும் மக்களுக்கு அனைவரும் உதவி செய்வதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.

English summary
Congress Vice President Rahul Gandhi yesterday visited flood affected area in tamilnadu and pudhucherry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X