சென்னை, திருவள்ளூரில் இடி மின்னலுடன் மழை.. மன்னார்குடியில் கன மழை
சென்னை: சென்னையின் சுற்றுப் பகுதிகளில் இன்று இரவு பலத்த சூறைக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. அதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு சென்னை புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

திருவொற்றியூர், மாதவரம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல சென்னையின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. விட்டு விட்டு தூறல் மழை காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. பள்ளிப்பாளையத்தில் பெய்த மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கிக் காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து இன்றும் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. இதேபோல மன்னார்குடியில் இன்று மாலை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications