வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. சென்னையிலும் வெயில் கொளுத்தி வருகிறது.

Rainfall is likely to cause in Tamil Nadu and Puducherry: The Meteorological center

வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இயல்பு நிலையை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 4 நாட்கள் வரை அதிகமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai Rain Creates Record On 7CM In An Hour-Oneindia Tamil

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Meteorological center said that the rainfall is likely to cause in Tamil Nadu and Puducherry. The temperature level will be increased for next 4 days.
Please Wait while comments are loading...