For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையாம்!

ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக் கூடும்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநரை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை | 7 years prison for those who interrupt Governor's duty

    சென்னை: ஆளுநர் பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். இது மாநில உரிமைக்கு எதிரான செயல் என திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் ஆய்வு நடத்த வந்த ஆளுநரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளையும் பலூன்களையும் வீசினர். இது தொடர்பாக 293 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைதை கண்டித்து ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டார்.

    அபராதம்

    அபராதம்

    இந்நிலையில் ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடுகையில், மாநில ஆளுநர், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சுதந்திரமாக சென்று ஆய்வு நடத்த அரசியலமைப்பு சட்ட அதிகாரத்தின்படி உரிமை உள்ளது. கவர்னரின் ஆய்வு குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது.

    ஜனாதிபதிக்கு அளிக்க வேண்டும்

    ஜனாதிபதிக்கு அளிக்க வேண்டும்

    மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற அடிப்படையில் கவர்னர், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தற்போது உள்ள சூழ்நிலையில் கவர்னர் மிகச்சரியான முடிவை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டங்களின் அம்சங்களையும், மக்கள் சந்தித்து வரும் பிரச்சினை களையும் அறிந்துகொள்வதன் மூலம் மட்டுமே சரியான அறிக்கையை மாதம்தோறும் குடியரசுத் தலைவருக்கு, ஆளுநர் அனுப்ப முடியும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

    எந்த உத்தரவும் இல்லை

    எந்த உத்தரவும் இல்லை

    மாவட்டம் தோறும் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தும்போது அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து அதிகாரிகள் எடுத்துக்கூறுகின்றனர். அதுபோன்று நடைபெற்ற எந்த கூட்டத்திலும், குறிப்பிட்ட துறையின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிப்பது இல்லை.

    திசை திருப்ப முயற்சி

    திசை திருப்ப முயற்சி

    மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அந்த திட்டத்தின் மூலம் செய்துள்ள சாதனை குறித்து அதிகாரிகள், கவர்னருக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சிகொள்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்து அவரது அலுவலகத்தை முற்றுகையிடவோ அல்லது கவர்னர் அலுவலக சாலையை மறித்து போராட முயன்றாலோ அதை தடுக்க இந்திய தண்டனை சட்டத்தின் 124-வது பிரிவு வழிவகை செய்கிறது.

    குற்றச்செயல்

    குற்றச்செயல்

    அந்த சட்டம், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ அல்லது முற்றுகை போன்ற ஏதாவது ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டாலோ 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கலாம் என்று கூறுகிறது. இனிமேல் யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். ஆரம்பத்தில் கவர்னர் மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொண்ட போது எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை அழைத்து கவர்னரின் ஆய்வு தொடர்பாக சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

    உறுதி செய்தல்

    உறுதி செய்தல்

    சட்டத்தை புரிந்து கொண்டு அவர்கள் தங்களது நடவடிக்கையை மாற்றிக்கொண்டு சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே கவர்னர் தனது பணியை செய்து வருகிறார்.

    ஆய்வு பணி

    ஆய்வு பணி

    எனவே, சட்டத்தை மீறி நடப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கவர்னரின் ஆய்வுப்பணி காரணமாக சாதாரண பொதுமக்கள் பயன்பெறுவதால் இந்த ஆய்வுப்பணி அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Rajbhavan release a press release that 7 years prison for those who interrupt Governor's duty. It also says Penalty will be imposed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X