For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்சநீதிமன்றத்தில் நாளை முன் ஜாமீன் மனு விசாரணை.. சரியாக இன்று ராஜேந்திர பாலாஜியை கைது செய்த போலீஸ்!

ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளநிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

விருதுநகர்: காவல்துறையின் கைதில் இருந்து தப்பிக்க அங்கே இங்கே என ஓடி ஒளிந்து டிமிக்கி காட்டிய ராஜேந்திரபாலாஜி ஹாசனில் கைது செய்யப்பட்டுள்ளார். 20 நாட்கள் அவர் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முன்ஜாமீன் மனு ரத்தானதில் இருந்து ஹாசனில் காவல்துறையினரிடம் ராஜேந்திரபாலாஜி சிக்கியது வரை என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு, ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, 3 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார்கள் வந்தன. இது குறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி தரப்பில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யுமாறு தனது வழக்கறிஞர்களிடம் சொல்லிவிட்டு விருதுநகரில் இருந்து புறப்பட்டார்.

தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜி கர்நாடகாவில் கைது - நடுரோட்டில் மடக்கிய போலீஸ் தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜி கர்நாடகாவில் கைது - நடுரோட்டில் மடக்கிய போலீஸ்

ராஜேந்திரபாலாஜி தலைமறைவு

ராஜேந்திரபாலாஜி தலைமறைவு

காவல்துறையினரின் கைதில் இருந்து தப்பிக்க உடனடியாக அவர் தலைமறைவானார். ராஜேந்திரபாலாஜியை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. முதலில் அவர் பெங்களூருக்கு சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் ராஜேந்திரபாலாஜி வெவ்வேறு கார்களின் மூலம் விருதுநகர், தென்காசி, செங்கோட்டை, புளியரை வழியாக கேரளாவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளிவந்தது. கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் முகாமிட்டு தேடி வந்தனர்.

உதவியாளர்கள் தலைமறைவு

உதவியாளர்கள் தலைமறைவு

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணா மற்றும் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை திருத்தங்கல் போலீசார் அவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணைக்காக அழைத்து சென்றனர். முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன் மற்றும் வக்கீல் முத்து பாண்டி ஆகியோரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.

ஜெயக்குமார் பேட்டி

ஜெயக்குமார் பேட்டி

ராஜேந்திரபாலாஜி டெல்லி சென்று மறைந்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, விமான நிலையங்கள் மூலம் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க ராஜேந்திர பாலாஜியை கண்டால் கைது செய்ய வழிவகை செய்யும் லுக் அவுட் நோட்டீஸ் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. ராஜேந்திரபாலாஜி இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

காரில் சுற்றிய ராஜேந்திரபாலாஜி

காரில் சுற்றிய ராஜேந்திரபாலாஜி

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் மற்றும் ஓட்டுநர் ஆறுமுகம் இருவரும் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியுடன் இருந்தது போலீசார் கண்காணிப்பில் தெரியவந்தது. கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, ராஜேந்திர பாலாஜி தருமபுரி வந்தது உண்மைதான். ஆட்சியர் அலுவலகம் எதிரில் அரை மணி நேரம் காரில் இருந்தபடி பேசிவிட்டுப் புறப்பட்டு விட்டார் என பொன்னுவேல் வாக்குமூலம் அளித்தார்.

வெவ்வேறு சிம்கார்டுகள்

வெவ்வேறு சிம்கார்டுகள்

அடிக்கடி தங்கியிருக்கும் இடத்தை மாற்றி தங்களுக்கு டிமிக்கி கொடுத்து வந்த ராஜேந்திரபாலாஜியைப் பற்றி துப்பு கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. 600க்கும் மேற்பட்ட போன் அழைப்புகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனாலும், அவரை நெருங்க முடியவில்லை. ராஜேந்திர பாலாஜி வெவ்வேறு சிம்கார்டுகளை பயன்படுத்தி, வழக்கறிஞரை தொடர்பு கொள்வதாகவும், போலீசார் நெருங்குவது அவருக்கு முன்கூட்டியே தெரிந்து அவர் காரில் மாறி மாறி பயணம் செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கானது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. அவருக்கு முன் ஜாமீன் கிடைக்குமா கைது நடவடிக்கையில் இருந்து தப்பி விடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்

காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்

20 நாட்களுக்கும் மேலாக ஓடி ஒளிந்து வந்த ராஜேந்திரபாலாஜி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட போது காவி வேட்டி, கறுப்பு மஞ்சள் டி-ஷர்ட் உடை அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர் உதவியோடு ராஜேந்திர பாலாஜி இடம் மாறிக்கொண்டிருந்தார் என்றும் அவர் இன்று ஹாசன் செக் போஸ்ட்டை கடந்த போது சிசிடிவியில் பதிவான காட்சிகளைக்கொண்டு பின்தொடர்ந்து சென்று கைது செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

English summary
RajendraBalaji has been arrested in Karnataka The blindfold game he played for 20 days has come to an end. Let's see what happened from the cancellation of the anticipatory bail petition to the arrest of RajendraBalaji by the police hassan district in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X