ரஜினி காட்டும் சின்னம் சாத்தானோடது- பகீர் கிளப்பும் சீமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினி சாத்தானின் சின்னத்தை காட்டுகிறார் - சீமான் அதிரடி- வீடியோ

  சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது கையில் காட்டும் சின்னத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான். அது சாத்தான்களின் முத்திரை என்றும் கூறியுள்ளார்.

  திமுக தலைவர் கருணாநிதி உதய சூரியனை சின்னத்தையும், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் வெற்றிச்சின்னமாக இரட்டை இலையையும் கை விரல்களில் காட்டி மக்களை கவர்வார்கள்.

  இப்போது நடிகர் ரஜினிகாந்த் பாபா முத்திரையை வெளிப்படையாக காண்பித்துள்ளார். நடிகர் ரஜினி பாபா படத்தில் வருவது போன்ற கை முத்திரையை ரசிகர்கள் முன்பாக பேசும் போதும், தனது இணையதளத்திலும் பயன்படுத்தியுள்ளார். அந்த சின்னம் சொல்வது என்ன என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

  கை முத்திரை

  கை முத்திரை

  இதை அஸ்த முத்திரை, அபான முத்திரை என்றும் யோக நிபுணர்கள் கூறுகின்றனர். கை முத்திரை வடிவங்களில், இது அபான யோக முத்திரை என்றே அழைக்கப்படுகிறது. கையின் நடுவிரலை மட்டும் மடித்து கட்டை விரலுடன் இணைப்பது வாயு முத்திரை. மோதிர விரலுடன் கட்டை விரலை இணைப்பது பிருத்வி முத்திரை.

  நோய்கள் தீரும்

  நோய்கள் தீரும்

  இந்த இரண்டு முத்திரைகளையும் ஒன்று இணைப்பது தான் அபான முத்திரை. அதாவது நடுவிரல் மற்றும் மோதிர விரலை மடித்து அதன் மேல் கட்டை விரல் வர வேண்டும். இதை பின்பற்றினால் உடல் உபாதைகளில் இருந்து விடுபடலாம் என்பது யோக நிபுணர்களின் கருத்து.

  தீய சக்திகளை விரட்டும்

  தீய சக்திகளை விரட்டும்

  இதே போன்று ஒரு முத்திரை புத்தர் சிலை மற்றும் ஓவியங்களில் காணப்படும். அதற்கு கருணா முத்திரை என்று பெயர். தீய சக்திகளை விரட்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு என்பது புத்த மதத்தினரின் நம்பிக்கை. இந்த சின்னத்தைத்தான் ரஜினி காட்டியுள்ளார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

  சாத்தான் சின்னம்

  சாத்தான் சின்னம்

  ரஜினி கையில் காட்டும் முத்திரை சாத்தான்களின் முத்திரை என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். புதிய தலைமுறை டிவிக்கு பேட்டியளித்த சீமான், ரஜினியின் சின்னம் போல பலர் கை காட்டும் முத்திரைகளையும் காட்டி விளக்கினார். சிம்பள் ஆஃப் ஈவில் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

  என்ன தொடர்பு

  என்ன தொடர்பு

  ரஜினி காட்டும் முத்திரைக்கும் பாபாவிற்கும் என்ன தொடர்பு என்று கேட்டுள்ள சீமான், இவர்களுக்கும், ரஜினிக்கு என்ன தொடர்பு என்று சிலரின் படங்களை காட்டி வினவியுள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajini symbol traverses many cultures, and yet a single thread of ‘cleansing, purity and power runs through them all. Seeman said that a very similar symbol that of the Devil’s Horn.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X