மாத்தணும்.. இந்த சிஸ்டத்தை மாத்தணும்.. ரஜினி அரசியல் பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சி ஆரமிப்பது பதவிக்காக இல்லை அரசியலை சரி செய்வதற்காக என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் சிஸ்டத்தை சரி செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.

தனி கட்சி ஆரமித்து வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறார். தன்னுடைய அரசியல் அறிவிப்பிற்கான காரணம் என்ன என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Rajini says he came into politics for people

அதில் ''45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா.அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன். பதவிக்கு ஆசைப்பட்டால் நான் ஆன்மீகவாதி என கூறுவதற்கு தகுதியற்றவன். பதவி ஆசை இருந்திருந்தால் 1996லேயே பதவி என்னை தேடி வந்தது'' என்றார்.

மேலும் 'நான் தமிழ்நாட்டில் இருக்கும் மோசமான சிஸ்டத்தை சரி செய்ய முடிவெடுத்து இருக்கிறேன்'' என்றார். மேலும் '' தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாக மாறிவிட்டது. மற்ற மாநிலங்களில் இருக்கும் மக்கள் தமிழ்நாட்டை பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.

மேலும் ''எனக்கு பெயர், புகழ், பணம் தேவை இல்லை. யார் தவறு செய்தாலும் அதை தட்டி கேட்கும் படையாக நாம் இருப்போம்' என்று கூறியுள்ளார்.

அதேபோல் ''தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக அரசியலில் மிக மோசமான நிகழ்வுகள் நடந்துவிட்டது. அதை எல்லாம் மாற்ற வேண்டும். '' என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajini has announced his political entry. He says he came into politics not for the sake of power but for people.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற