யுத்தத்திற்கு போனால் ஜெயிக்க வேண்டும்... ரஜினியின் பக்கா அரசியல் வியூகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினிகாந்தின் பரபரப்பு பேச்சு வீடியோ

 சென்னை: 1996 முதலே நான் அரசியலில் இருக்கிறேன், அரசியலுக்கு வர வியூகம் என்பது மிகவும் முக்கியம். போருக்குப் போனால் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னையில் ரசிகர்களுடனான சந்திப்பின் தொடக்க விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் டிசம்பர் 31 வரை ரசிகர்களை சந்திக்கிறார். நாள்தோறும் ஆயிரம் பேர் வீதம் மொத்தம் 6 ஆயிரம் பேரை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.

முதல்நாளான இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது : நான் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்று மக்களை விட ஊடகங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. வழக்கமாக என்னுடைய பிறந்தநாளை தனிமையில் தான் கொண்டாட நினைப்பேன், இந்த முறை அதிக ரசிகர்கள் என்னுடைய வீட்டின் முன் வந்திருந்தனர், அவர்களை நான் பார்க்க முடியவில்லை மன்னித்து விடுங்கள்.

இப்போது தேர்தலா வந்துவிட்டது?

இப்போது தேர்தலா வந்துவிட்டது?

போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன், போர்னா தேர்தல் தான். இப்போது என்ன போர் வந்துவிட்டதா? ஆனால் சீன் போடுகிறார் ரஜினி, அரசியல் அறிவிப்பை இழுக்கிறார் என்று சொல்கின்றனர்.

ஏன் தயங்குகிறேன்?

ஏன் தயங்குகிறேன்?

அரசியலுக்கு நான் புதிததல்ல 1996 முதலே அரசியலில் இருக்கிறேன். அரசியலில் என்ன கஷ்ட நஷ்டம், அதன் ஆழம் என்ன என்று தெரிந்ததாலேயே தயங்குகிறேன்.

ஜெயிக்க வீரம் மட்டும் போதாது

ஜெயிக்க வீரம் மட்டும் போதாது

தெரியவில்லை என்றால் ஓகே என்று எப்போதோ வந்திருப்பேன். யுத்தத்திற்கு போனால் ஜெயிக்கணும். ஜெயிக்ணும்னா வீரம் மட்டும் போதாது, வியூகம் வேண்டும் புத்தியை பயன்படுத்த வேண்டும்.

அரசியல் நிலைப்பாடு?

அரசியல் நிலைப்பாடு?

நான் அரசியலுக்கு வருவதை என்னுடைய அண்ணன் தான் தடுக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth says he is not new to politics from 1996 he is in politics and also says if gone for War Sucess is the only goal for that planning is very important.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற