எல்லோரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் 31ம் தேதி ரஜினி அறிவிக்கப்போகிறார்.. நாஞ்சில் சம்பத் நக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜனியை கலாய்க்கும் நாஞ்சில் சம்பத்- வீடியோ

  சென்னை: எல்லோரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் 31ஆம் தேதி ரஜினி அறிவிக்கப்போகிறார் என்று தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் நக்கலடித்துள்ளார்.

  நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

  இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.

  வரமாட்டேன் என அறிவிப்பார்

  வரமாட்டேன் என அறிவிப்பார்

  அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவே மாட்டார் என அவர் அடித்து கூறினார். அவர் 31ஆம் தேதி அரசியலுக்கு வர மாட்டேன் என்றுதான் அறிவிக்கப்போகிறார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.

  தியானம் செய்யுங்கள்

  தியானம் செய்யுங்கள்

  மேலும் அனைவரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் ரஜினி 31ஆம் தேதி அறிவிக்கப் போகிறார் என்றும் நாஞ்சில் சம்பத் நக்கலடித்தார். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பியிருப்பவர்கள் ஏமாறப்போகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

  மணல் வீடுகட்டி மகிழ்வதல்ல

  மணல் வீடுகட்டி மகிழ்வதல்ல

  ரஜினியால் அரசியலுக்கு வரமுடியாது என்றும் நாஞ்சில் சம்பத் அடித்து கூறினார். அரசியல் ஒன்றும் பிள்ளை விளையாட்டல்ல, அரசியல் ஒன்றும் மணல் வீடு கட்டி மகிழ்வதல்ல என்றும் அவர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

  காணிக்கையாக செலுத்தவேண்டும்..

  காணிக்கையாக செலுத்தவேண்டும்..

  அரசியலுக்கு வரவேண்டும் என்றால் ரத்தத்தையும் சதையையும் காணிக்கையாக செலுத்த வேண்டும் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினர்.

  யாரும் ஊடுறுவ முடியாது

  யாரும் ஊடுறுவ முடியாது

  ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துதான் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் தமிழ்நாடு இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் இந்தக் கோட்டையில் யாரும் உடுறுவ முடியாது என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajini will not come to politics said Nanchil Sampath. He also said Rajini will announce on 31st December to public to do meditation

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற