ரூ.1 கோடி செலவிட ரெடின்னா தேர்தலில் போட்டியிட டிக்கெட்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ரஜினி கட்சி சுறுசுறு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆன்மீகத்திற்கும் அரசியலிற்கும் வேறுபாடு தெரியாதவரா ரஜினிகாந்த் ?- வீடியோ

  சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி சார்பில் களமிறக்கப்பட உள்ள வேட்பாளர்களுக்கு பணம் ஒரு பிரதான தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியை நடத்தி, தேர்தலை சந்திக்க வேண்டுமானால் பணம் மிக மிக அத்தியாவசிய தேவையாக உள்ளது.

  'விட்டமின் ப' மட்டும் இருந்துவிட்டால், ஜெயலலிதாவாலேயே கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டவரால் கூட, ஜெயலலிதாவின் கட்சி சின்னத்தையே ஈஸியாக தோற்கடித்துவிட முடியும் என்பதே தமிழகம் கற்றுக்கொடுத்த பாடம்.

  பக்கா ஏற்பாடுகள்

  பக்கா ஏற்பாடுகள்

  இப்படியான ஒரு சூழலில், வடிவேலு பாணியில் கூற வேண்டுமானால், ரத்த பூமியில், ரஜினி அரசியல் செய்ய வருகிறார் என்றால் அதற்கேற்ற முன்னேற்பாடு இல்லாமல் இருக்குமா? எல்லா ஏற்பாடும் பக்கா என்கிறது போயஸ் கார்டன் வட்டாரம்.

  வெளிநாட்டு தமிழர்கள்

  வெளிநாட்டு தமிழர்கள்

  ரஜினியின் தீவிர அரசியல் ரசிகர்களும், வெளிநாட்டில் வாழும் ரஜினியின் தீவிர ரசிக தொழிலதிபர்களும், குறிப்பாக அமெரிக்காவில் ஐடி தொழிலில் கொடிகட்டி பறப்பவர்களும், ரஜினிகாந்த் கட்சிக்கு நிதி உதவி செய்ய தயாராக உள்ளார்களாம். கணிசமான நிதி உதவியை வெளிநாடு வாழ் தமிழர்களிடமிருந்தே பெற உள்ளாராம் ரஜினிகாந்த்.

  டெக்னாலஜி முக்கியம்

  டெக்னாலஜி முக்கியம்

  ரஜினியின் முகாம் முழுக்க தயாராகவே உள்ளதாம். எப்போது கட்சியை தொடங்க வேண்டும், எந்தமாதிரி வாக்காளர்களை ஈர்க்க வேண்டும் என்பதில் ரஜினிகாந்த் டீம் பக்காவாக ரெடியாகியுள்ளது. டெக்னாலஜியை அதிக அளவில் பயன்படுத்தி கட்சியை மார்டனாக கொண்டு செல்வதே ரஜினி நோக்கம். ரஜினிக்கு மக்கள் மத்தியில் அதுவும் பெண்கள் மத்தியில் கணிசமாக செல்வாக்கு உள்ளதால், டெக்னாலஜி மூலம் இளைஞர்களை ஈர்ப்பது முக்கிய திட்டம்.

  ஊழல்வாதிகளுக்கு நோ-என்ட்ரி

  ஊழல்வாதிகளுக்கு நோ-என்ட்ரி

  கட்சியில் ஊழல்வாதிகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்பதில் ரஜினிகாந்த் மிக தெளிவாக உள்ளார். ஏற்கனவே அவர் தனது பேச்சு ஒன்றில் நான் கட்சி ஆரம்பித்தாலும் ஊழல்வாதிகள் அதை வைத்து ஆதாயம் அடையலாம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இப்போதே ஒதுங்கிவிடுங்கள் என கூறியிருந்தார். ரஜினியை சமீபத்தில் சந்தித்து போட்டோ எடுத்த ரசிகர்களை கூட, அவர்களின் பின்னணியை பார்த்து, ஃபில்டர் செய்தே அனுமதி கொடுத்தார்களாம்.

  ரூ.1 கோடி ஆனால் ஒரு கன்டிஷன்

  ரூ.1 கோடி ஆனால் ஒரு கன்டிஷன்

  ரஜினிகாந்த்தின் மற்றொரு டீம், 234 தொகுதிகளுக்கும் நல்ல வேட்பாளர்களை தேடும் வேலையில் இப்போதே இறங்கிவிட்டது. வேட்பாளர்கள் தேர்வில் சில விஷயங்கள் அடிப்படையாம். அந்த வேட்பாளர் தேர்தலில் தனது தொகுதியில் குறைந்தபட்சம் ரூ.1 கோடியாவது செலவிட தயாராக இருக்க வேண்டும், அதற்கான தகுதியோடு இருக்க வேண்டும். ஆனால் அதிலும் முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.1 கோடியும் சமூக சேவைக்கே செலவிடப்பட வேண்டும் மற்றும் அந்த பணத்தை மீண்டும் அரசியலில் இருந்தே சம்பாதிக்கும் எண்ணம் இருக்க கூடாது. இதற்கு சம்மதம் என்றால் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth's team is working on that by sounding out friends and looking for right candidates for all the 234 assembly segments, with a capacity to spend at least Rs 1 crore.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற