நேற்று கருணாநிதி... இன்று ஆர்.எம்.வீரப்பன்... நாளை யாரை சந்திப்பார் ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கு கருணாநிதியிடம் ஆசி பெற்றார் ரஜினிகாந்த்- வீடியோ

  சென்னை: எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனை அவரது வீட்டில் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

  ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி என்றும் கடந்த 31-ஆம் தேதி அறிவித்தார். அவர் ஆன்மீக அரசியல் என்று குறிப்பிட்ட ஒரு சொல் இன்றுவரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் எங்கு பார்த்தாலும் பேசப்பட்டு வருகிறது.

  Rajinikanth going to meet RM Veerappan

  கடந்த புத்தாண்டு அன்று ரஜினிமன்றம் என்ற இணையதளமும் செல்போன் செயலியையும் தொடங்கிவைத்து மக்கள் அதில் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

  இதுகுறித்து சமூகவலைதளங்களிலும் கருத்து பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கூறி ஆசி பெற்றார்.

  இந்நிலையில் எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த நிலையில் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறார். கடந்த 1996-ஆம் ஆண்டிலேயே ரஜினி அரசியலுக்கு வர விரும்பியவர் ஆர்.எம்.வீரப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth is going to meet R.M.Veerappan. As he met DMK Chief Karunanidhi yesterday and got his blessings.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற