இன்று தனிக்கட்சி தொடங்கிறார் ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ரஜினிகாந்த் இன்று அரசியல் களத்தில் குதிக்கப் போவதாக செய்திகள் வலம் வருகின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். ஆனால் அவர் பிடி கொடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் அவர் அரசியலுக்கு வருவது போன்ற பேச்சுகள் ரசிகர்களுக்கு உற்காகத்தை அளித்தன.

நண்பர் ராஜ்பகதூர்

நண்பர் ராஜ்பகதூர்

ரஜினி நிச்சயம் தனிக் கட்டி தொடங்குகிறார் என்று தமிழருவி மணியனும், நண்பர் ராஜ்பகதூரும் கூறியது ரசிகர்களின் சந்தோஷம் இரட்டிப்பாகியது. இதனிடையே அவர் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ரசிகர்களுடன் சந்திப்பு

ரசிகர்களுடன் சந்திப்பு

கடந்த 26-ஆம் தேதி முதல் ரஜினி 2-ஆவது முறையாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். முதல் நாளன்று அரசியல் களத்தில் இறங்குவது குறித்து கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ 31-ஆம் தேதி கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்

ரஜினி வருவாரா வரமாட்டாரா என்ற பட்டிமன்ற விவாதங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று ரஜினி கூறிய 31-ஆம் நாளில் ஏதேனும் அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிக்கட்சி

தனிக்கட்சி

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று தென் சென்னை ரசிகர்களை சந்திக்கிறார். அப்போது தனது அரசியல் பிரவேசம் குறித்த முழு அறிவிப்பையும் அறிவிக்கிறார் என்று கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth is going to start new party. Today he will announce party name, flag, symbol everything.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற