அமெரிக்காவில் இருந்து ஜப்பான் வரை.. ஒரு மணி நேரத்தில் உலக டிரெண்டில் இடம்பிடித்த ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசியலுக்கு வருவது உறுதி... ரஜினியின் பரபரப்பு பேச்சு

  சென்னை: ரஜினி தன்னுடைய அரசியல் அறிவிப்பை இன்று வெளியிட்டார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் இந்தியா முழுக்க கொண்டாடி வருகின்றனர்.

  இந்தியா மட்டும் இல்லாமல் ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் அவருக்கு இருக்கும் ரசிகர்களும் அதிகமாக இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஹேஷ்டேக் உலகம் முழுக்க வைரல் ஆகி உள்ளது.

  ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து ஹேஸ்டேக் உலகம் முழுக்க ஒரே மணிநேரத்தில் டிரெண்ட் ஆகி இருக்கிறது.

  என்ன டேக்

  என்ன டேக்

  ரஜினி அரசியல் அறிவிப்பிற்காக '#Rajinikanthpoliticalentry' என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில டேக்குகள் இதற்கு பயன்படுத்தப்பட்டாலும் இதுவே அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதுதான் தற்போது இந்திய அளவில் டிரெண்டிங்கில் மூலம் இடம் பிடித்துள்ளது.

  இந்திய வைரல்

  இந்திய வைரல்

  அரசியல் அறிவிப்பு வெளிவந்த அடுத்த நொடியே இந்த டேக் இந்தியா முழுக்க டிரெண்ட் ஆகிவிட்டது. தமிழர்கள் மட்டும் இல்லாமல் இந்தியாவே எதிர்பார்த்த அரசியல் அறிவிப்பு என்பதால் பலரும் இதில் சாதகமாகவும் எதிராகவும் பேசி வந்தனர்.

  ஒரே மணி நேரம்

  ஒரே மணி நேரம்

  குஜராத் தேர்தல் முடிவு கூட உலக டிரெண்ட் ஆகவில்லை. ஆர்.கே நகர் தேர்தல் முடிவு மட்டுமே கடைசியாக உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. தற்போது ரஜினியின் டேக்கும் டிரெண்ட் ஆகி இருக்கிறது. ஆச்சர்யமாக ரஜினியின் ஹேஷ்டேக் ஒரே மணி நேரத்தில் டிரெண்ட் ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  உலகம் முழுக்க

  இந்த டிவிட் உலகம் முழுக்க வைரல் ஆனது. அதன்படி ஜப்பான், சீன, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வைரல் ஆகியுள்ளது. ஜப்பானில் இருக்கும் அவரது ரசிகர் ''ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது'' என்று கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajini announced his political entry. Due to this Rajinikanth political entry hashtag become world wide trend. People all over the world tweeting in #Rajinikanthpoliticalentry tag.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற