For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுத்தத்திற்கு புறப்பட்டிருக்கும் ரஜினி முன்பு இருக்கும் சவால்கள் என்னென்ன? #Rajinifortamilnadu

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: ஒரு கட்சியை ஒருவர் புதிதாக தொடங்கும் தலைவருக்கு வழக்கமாக இருக்கும் சவால்களை விட பல மடங்கு கடுமையான சவால்கள் ரஜினிக்கு முன்பு இருக்கிறது. இருக்கப்போகிறது என்பதே எதார்த்தம்.

தமிழகத்தில் எப்போதெல்லாம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேச்சு வருகிறதோ அப்போதெல்லாம் ரஜினி ஒரு கர்நாடாகக்காரர், அவர் எப்படி தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என்ற விவாதம் உணர்ச்சிப்பூர்வமாக எழுந்துவருகிறது. கன்னடம் பேசும் நபர் என்ற பிம்பத்தை உடைப்பது ரஜினி முன்னாள் இருக்கும் மிக முக்கியமான சாவல்கள் ஒன்று.

அண்மையில் பேசிய ரஜினி, தான் ஒரு பச்சைத்தமிழன் என்றும், கிருஷ்ணகிரி மாவட்டம்தான் தனக்கு பூர்வீகம் என்று ரஜினி தெரிவித்திருந்தார். ஆனால், அது சரியான முறையில் எடுபட்டதாகத்தெரியவில்லை.

காவிரி நீர் விவகாரம்

காவிரி நீர் விவகாரம்

எப்போதெல்லாம் காவிரி நீர் விவகாரம் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கிறதோ அப்போதெல்லாம், கர்நாடகாவில் நடிகர்கள் போராட்டம் நடத்துவார்கள். அப்போது தமிழத்தில் ஏன் நடிகர்கள் அமைதிக்காக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒருமுறை நடிகர்சங்கம் சார்பில் போரட்டம் நடத்தப்பட்டது, ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அதில், ரஜினி கடுமையாக கர்நாடாவைச்சேர்ந்த அமைப்புகளை விமர்சித்திருந்தார். ஆனால், பின்னர் மன்னிப்புக்கேட்டார். தமிழர்கள் நலனுக்கு ரஜினி குரல் கொடுக்க மாட்டர் என்ற பிம்பத்தை உடைக்கவேண்டும் என்ற சவாலும் முக்கியமானது.

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை

விவசாயிகள் தற்கொலை, வறட்சி, மீத்தேன், கார்பன் எடுக்கும் திட்டங்கள் இப்படி, எல்லாவற்றிலும் இது வரை ரஜினி தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. விவசாயிகளின் போராட்டங்களின் போதும் ரஜினி குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் வலுவாக உள்ளது. இதுவும் ரஜினிக்கு அடுத்த சவால்.

என்ன செய்தார் ரஜினி?

என்ன செய்தார் ரஜினி?

இலங்கையில் நடந்த போரில், ஆயிரக்கணக்காண தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் நடிகர்கள் வலுவான எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. தமிழர் என்ற உணர்வுடன் செயல்படவில்லை என்று பேசப்பட்டது. அந்த பட்டியலில் ரஜினியின் பெயரும் உள்ளது. தமிழர்களுக்கு என்ன செய்துவிட்டார் ரஜினிகாந்த் என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டும் என்பது அடுத்த சவால்.

அமைதி ஏன்?

அமைதி ஏன்?

உலத்தமிழர்களை ஒருங்கிணைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது நடிகர் ரஜினிகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார். ஏன் அப்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி முன்வைக்கப்படுகிறது. ரஜினி இந்த பிம்பத்தை உடைக்க சிரமப்படவேண்டியிருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மக்கள் வாழ்வாதார பிரச்னையில்?

மக்கள் வாழ்வாதார பிரச்னையில்?

ஊழல் மட்டுமே தமிழகத்தின் முக்கியபிரச்சனையா? ஏனென்றால், ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு மாநில உரிமை, மக்கள் பிரச்னைகள் என அடிப்படையாக பல அம்சங்கள் கவனிக்கப்படவேண்டியுள்ளது. இதில் ரஜினியின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆன்மீக அரசியல் கொள்கையுடன் ரஜினியின் ரசிகர்கள் மக்களை சந்திதால் வரவேற்பு கிடைக்குமா? எதிர்ப்பைச் சந்திப்பார்களா? பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

English summary
How Rajini face people, is corruption demolition is only enough to cover Tamilnadu people, what are the challenges in front of him while he start an individual party?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X