ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் இயற்கை என்ன செய்யும் தெரியுமா? பீதி கிளப்பும் வைரல் பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால்தான் தமிழகத்தில் நிலவும் வறட்சி நீங்கும் என்ற வாசகங்களோடு துண்டு பிரசுரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

Rajinikanth should coming to politics for avoiding the drought, viral post says

இயற்கையின் தீர்ப்பு என்ற தலைப்பிலான அந்த துணுக்கில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே தீரவேண்டும். ஏநெனில் அவர் வராத காரணத்தினால் இயற்கை கட்டுப்பட்டு இருக்கிறது. இனியும் வர கால தாமதமாக்கினால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலமும், கடும் வறட்சியை சந்திக்க நேரிடும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மாத்திரமே, இயற்கை மழை பொழியும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். மமக்களுக்காக அவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும். இது இயற்கையின் தீர்ப்பு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சிவசக்தி அருணகிரி என்ற பெயர் கீழே பொறிக்கப்பட்டுள்ளது. மேலே ரஜினியின் பாபா திரைப்பட ஸ்டில்லுடன், சாமியார் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. சிலரோ இது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்வோரை கேலி செய்யும் வகையில் இருப்பதாக கூறும் நிலையில், சிலரோ ரஜினி ஆன்மீகவாதி என்பதால் அந்த நம்பிக்கையில் உண்மையிலே வெளியிடப்பட்ட தகவல் என்றும் கூறுகிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A piece of leaflet is accompanied, with the words of Rajinikanth coming to politics for avoiding the drought that prevails in Tamil Nadu.
Please Wait while comments are loading...