சிரஞ்சீவிக்கு காங்கிரஸ்.. ரஜினிகாந்த்துக்கு பாஜக.. பின்னணி இதுவாக இருக்குமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இது மிகவும் தாமதமான முடிவு என்று கூறுகிறார், சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாக துறையின் தலைவரான பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

இதுகுறித்து 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சம் இது:

ரஜினிகாந்த் 20 வருட யோசனைக்கு பிறகு அரசியலில் இணைவது குறித்த தனது முடிவை அறிவித்துள்ளார். தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். அவரது தீவிர ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்திருக்கலாம். ஆனால், தமிழக அரசியலில் ஒருமாற்றாக உருவாகி ஆட்சியை பிடிப்பார் என நான் கருதவில்லை.

முடிவை மாற்றலாம்

முடிவை மாற்றலாம்

ரஜினிகாந்த் முடிவு என்பது 20 வருட காலம் தாமதமானது. தமிழக அரசியல் கீழே இறங்கி அதன் அடி மட்டத்தை தட்டியுள்ள இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தந்துள்ளார். இன்னும் சில மாதங்கள் களத்தில் நேரத்தை செலவிட்ட பிறகு, ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என கருதுகிறேன்.

ரஜினிகாந்த்துக்கு காத்திருக்கும் சவால்

ரஜினிகாந்த்துக்கு காத்திருக்கும் சவால்

அரசியல் கட்சிகளும், அரசியல் அறிவு கொண்ட மக்களும் ரஜினிகாந்த்துக்கு எந்த மாதிரியான வினாக்களை எழுப்ப போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. இரு தரப்புமே கடினமான கேள்விகளை எழுப்ப கூடும். மக்கள் இயக்கம் பல கண்ட தமிழகமும், ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்திய, சமூக வலைத்தளங்களை அரசியல் விவாத களமாக பயன்படுத்தும், இந்த கால தலைமுறையும், ரஜினிக்கு கடினமான கேள்விகளை முன் வைக்கும்.

கார்பொரேட் முதலாளிகள்

கார்பொரேட் முதலாளிகள்

ரஜினிகாந்த் பாஜக அனுதாபியாக அறியப்பட்டவர். மிதவாத ஹிந்துத்துவாவாதி. ஆன்மீக அரசியல் குறித்து பேசும் ரஜினி ஊழலுக்கு எதிராக செயல்பட ரசிகர்களுக்கு அழைப்புவிடுக்கிறார். ஆனால் வசதியாக, இவரது திரைப்படங்களை புரமோட் செய்த கார்பொரேட் முதல் பற்றி மறந்துவிட்டார். ரஜினிகாந்த் எப்படியும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்க முடியாது.

திராவிட கட்சிகளின் பங்கு

திராவிட கட்சிகளின் பங்கு

ஊழல்தான் திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு தந்த பரிசு என ரஜினிகாந்த் தவறாக நினைத்துக்கொண்டுள்ளார். கலாசாரம், சமூகம், அரசியல் மற்றும் கொள்கை வடிவமைப்பில் திராவிட கட்சிகளின் பங்களிப்பை மறுதலிக்க முடியாது. ரஜினிகாந்தின் சவாலை எதிர்கொள்ளும் முன்பாக, பிரிக்கப்படாத ஆந்திர பிரதேசத்தில் சிரஞ்சீவி துவங்கிய கட்சியின் பணி என்னவாக இருந்தது என்பதை திராவிட கட்சிகள் ஆராய வேண்டும்.

சிரஞ்சீவி நிலை

சிரஞ்சீவி நிலை

சிரஞ்சீவி ஆந்திராவில் சிறு கட்சியை துவக்கினார். அந்த கட்சியும் சில காலங்கள் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் இறுதியாக அந்த கட்சியை காங்கிரஸ் விழுங்கிக்கொண்டது. அதேபோல தமிழகத்தில் பாஜகவும் செய்ய வாய்ப்புள்ளது. 50 ஆண்டுகளாக தேசிய கட்சிகளுக்கு தமிழகம் எட்டாக்கனியாக உள்ளது. ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தால் தங்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று தேசிய கட்சிகள் நினைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ramu Manivannan is professor and head – department of Politics and Public Administration, University of Madras writes hisviews on Rajinikanth's political entry in Hindustan Times.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற