"காலா" ரஜினி முதல் "விவேகம்" அஜீத் வரை.. ரங்கசாமியை வைத்து விளையாடிய தொண்டர் படை!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: ரங்கசாமி ஆதரவாளர்கள் எப்பவுமே ரொம்பவே வித்தியாசம். பிறந்த நாளாகாட்டும், பதவியேற்பாகட்டும் புதுவையை கலக்கி எடுத்து விடுவார்கள்.

60 வயதைத் தாண்டியவராக ரங்கசாமி இருந்தாலும் கூட அவரது தொண்டர்களைப் பொறுத்தவரை ரங்கசாமி ஒரு விஜய், அஜீத் மாதிரிதான். கடந்த 4ம் தேதி ரங்கசாமியின் பிறந்த நாளாகும். இதையொட்டி அவரது தொண்டர்கள் வழக்கம் போல புதுவையைக் கலக்கி விட்டனர்.

அவர்கள் வைத்திருந்த வித்தியாசமான டிஜிட்டல் பேனர்கள் புதுவை மக்களை மிரள வைத்து விட்டன. இன்னும் கூட அந்த போஸ்டர்களின் தாக்கத்திலிருந்து புதுவை மீளவில்லை.

வீரத் துறந்தரா

வீரத் துறந்தரா

இந்த போட்டோஷாப் வேலையைப் பாருங்க. ரங்கசாமிக்கே அடடா நாமா இது என்று ஆச்சரியம் வந்திருக்கும். நல்ல வேலைப்பாடுள்ள போட்டோஷாப் இது!

முடிசூடா மன்னர்

முடிசூடா மன்னர்

சிங்கத்தின் பிடரியில் ரங்கரின் கை. சிம்மாசனத்தில் அவர் வீற்றிருக்கும் ஸ்டைலும் தனி. புதுவையின் மன்னராக கூறுகிறது இந்த டிஜிட்டல் பேனர்.

காலா

காலா

காலா படத்தில் ரஜினி உட்கார்ந்திருக்கும் போஸில் ரங்கரசாமியை மிக்ஸ் செய்து அசத்தியுள்ளனர் அவரது விசுவாசிகள்.

மொத்தமா முடிச்சுட்டு வர்றேன்

மொத்தமா முடிச்சுட்டு வர்றேன்

அடேங்கப்பா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது இந்த போஸ்.

இளைஞர்களின் எதிர்காலமே

இளைஞர்களின் எதிர்காலமே

இளைஞர்களின் எதிர்காலம் ரங்கசாமி என்று குதிரை மீது ஏற்றி புதுவையை ஊர்கோலம் வர வைத்துள்ளனர் ரங்கசாமி ஆதரவாளர்கள்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

புதுச்சேரியின் பிக் பாஸ் ரங்கசாமி என்கிறது இந்த போட்டோஷாப் பேனர். ஒரே ஊரில் 30 கேமராக்கள், 30 இடங்கள், 30 பிரபலங்கள் என வாசகங்களும் தாறுமாறு. தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மாதிரி என்டர்டெய்ன்மென்ட் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை.. அந்த வகையில் புதுவை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+