போன மாதிரியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. ரவிசாஸ்திரியை ரஜினியாக்கிய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான பல்வேறு கமெண்டுகள் டுவிட்டரில் உலாவி வருகின்றன.

இதில் சில உங்கள் பார்வைக்கு..

வந்துட்டேன்னு சொல்லு..

"வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு 2 வருசத்துக்கு முன்னாடி எப்படி போனனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!" என்று மஸ்தின் பாரெவர் பதிவில் ரவிசாஸ்திரியை ரஜினியாக மாற்றிவிட்டார்.

வெறும் வாய் வைத்து வாழும்..

"திறமை இருக்கும் பலர் ஒதுக்க பட்டிருக்க வெறும் வாயை வைத்து மட்டுமே சிலர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்" என்று மெர்சல் பையன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மைக்கை வைத்து விட்டு மட்டையை எடுத்தவர்

"இறுதியாக வெற்றி பெற்றது கிரிக்கெட் தான் என கூறிக்கொண்டு மைக்கை வைத்து விட்டு மட்டையை எடுத்தார் அந்த பயிற்சியாளர் .... மேஸ்திரி" என்று சுபாஷ் பதிவிட்டுள்ளார்.

பள்ளியை மாற்றிய கதை

"இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு மாணவன் படிக்கவில்லையென ஆசிரியரையும் பள்ளியையும் மாற்றிய கதை" என்று வினிதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There are some twitter comments on Ravi Shastri appointment as a new coach for cricket team.
Please Wait while comments are loading...